யாழில் ஹெரோயின், போதைப்பொருளுடன் 7 பேர் கைது
யாழ்.குடாசாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். பண்ணை வீதியில் ( சிறிலங்கா ரெலிக்கோமிக்கு அண்மையில்) ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் 6 பேரை 800 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் ஆறுபேர்மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நாளை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை, யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் 300 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment