வெள்ளிக்கிரகத்தில் ஏற்படும் மாற்றத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி காலை 6மணிமுதல் காலை 10 மணிவரை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்குக் கிடைக்கும் என்று கொழும்பு கோள் மண்டலத்தின் விரிவுரையாளர் திருமதி கே.பி.கே.கோரலகம தெரிவித்துள்ளார்.
கோள் மண்டலத்தில் இதுபற்றிய விசேட சொற்பொழிவொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 100 வருடத்திற்கு இரண்டு முறை இடம்பெறுகிறது.
எதிர்வரும் 6ம் திகதி இடம்பெறும் வெள்ளிக்கிரக மாற்றம் நூற்றாண்டின் முதலாவது வெள்ளிக்கிரக மாற்றமாகும். இந்த அரிய வாய்ப்பை மக்களும், பாடசாலைமாணவர்களும் காண்பது அவசியம் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment