ஈபிடிபியின் மண் வியாபாரத்திற்கு வேட்டு. 6 பேர் கைது.
யாழ்பாணத்தில் மண்வியாபாரத்திற்கான ஏகபோக உரிமையை ஈபிடிபி பலாத்காரமாக தனது கையில் வைத்துள்ளது. இதற்கு யாழ் அரச அதிகாரிகள் அர்ப்ப சலுகைகளுக்காக உடந்தையாக உள்ளனர். இந்நிலையில் யாழ்.அரியாலை முள்ளிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஈபிடிபியின் மண்வியாபாரிகள் எனத் தெரியவருகின்றது. இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிவிலில் உடையில் சென்ற பொலிஸாரே குறித்த 6 பேரையும் கைது செய்துள்ளதுடன் 2 உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment