நுளம்புகள் பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்தால், 6 மாதங்களுக்கு சிறை தண்டனை
ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை, தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடன ப்படுத்தியுள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு ஒழிப்பு சட்டவிதிகளை கடுமையாக நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளை பணித்துள்ளார்.
எந்தவொரு நிறுவனத்திலோ, வீட்டிலோ நுளம்புகள் பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்தால், அதற்கான பொறுப்பை, நிறுவன தலைவரோ, வீட்டு உரிமையாளரோ ஏற்க வேண்டும். அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், 50 ஆயிரம் ரூபா அபராதமோ, 6 மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனையோ நீதிமன்றத்தினால் விதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுளம்பு ஒழிப்பு வாரம் முடிவடைந்ததன் பின்னர், அந்த சட்டங்களை அதேவிதமாக முன்னெடுப்பதற்கு, சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக சுhதார அமைச்சு தெரிவித்துள்ளது
0 comments :
Post a Comment