கட்சியில் சேர மறுத்தவர்களை கொல்ல முயன்றதாக வழக்கு: 6 தி.மு.க. பிரமுகர்கள் கைது
கட்சியில் சேர மறுத்தவர்களை கொல்ல முயன்ற 6 தி.மு.க. பிரமுகர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவின் திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன், பாஸ்கர் ஆகியோரை கடந்த மாதம் ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்தது. இதுகுறித்து இருவரும் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியின் உறவினர் கார்த்திக் மற்றும் தி.மு.க. வினர்களான பாண்டியன், கிஷோர், செந்தில், ரவிந்திரன், சத்யராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சரவணன், பாஸ்கர் இருவரும் முன்பு தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு கட்சி மாறினார்கள். அவர்களை மீண்டும் தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடந்தது. ஆனால் சேர மறுத்து விட்டனர். இது தொடர்பாக கே.பி. சங்கர், அவரது மனைவி கஸ்தூரி கட்சியில் மீண்டும் சேர அழைத்தும் வராததால் கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பட்ட பகலில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்பட்டதால் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்கு மண்டலத்தில் பெண் ரவுடி கலாவதி, ரவுடிகள் சிவா, கோபி ஆகியோர் குண்டர் தடுப்பு காவலின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஓட்டேரி சாஸ்திரி நகரை சேர்ந்த பிரகாஷ் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
0 comments :
Post a Comment