கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல்30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் பி.விஜேவீரதெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் 16 வயதை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும். தாம் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் ஊடாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். இது தொடர்பாக சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment