முட்டை விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளமையாலும், கோழிகளின் உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையாலும் கோழிப் பண்ணைகளில் கோழிக்கு உணவு மற்றும் மருந்து வழங்க முடியாத அளவுக்கு வருமானம் குறைந்துள்ளமையால் கோழிகள் உயிரிழக்க ஆரம்பித்துள்ளது. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான கோழிகள் உயிரிழந்துள்ளதாக அனைத்து இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் வடமேல் மாகாண சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிக கூடிய அளவில் கோழிப் பண்ணை அமைந்துள்ள பகுதியாக வடமேல் மாகாணம் உள்ளன. இங்கு 9734 கோழிப் பண்ணைகள் அமைந்துள்ளன. இந்தப் பண்ணைகளிலிருந்து நாளோன்றுக்கு 20 இலட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் கிடைக்கின்றன.
அத்துடன் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் வேலைத் திட்டத்தின் கீழ், இலட்சக் கணக்கான கோழிக் குஞ்சுகள் கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டுள்ளமையும் இந்தப் பிரச்சினைக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதென கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது முட்டையின் மொத்த விலை 5.50 ரூபா வரை கீழ் இறங்கி உள்ளது. இதனால் கோழிப் பண்ணைக்கு இட்ட செலவை ஈட்ட முடியாதுள்ளதால் கோழிகளுக்கு சரியான உணவு மற்றும் மருந்து வழங்க வாய்ப்பு இல்லாது உள்ளதாகவும்,
இந்தப்பிபிரச்சினை விரையில் தீர்வு காணப்படாவிட்டால் ஆயிரக் கணக்கான கோழிப் பண்ணைகள் மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இத்தொழிலில்; ஈடுபடும் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொழிலை இழக்க வேண்டி நேரிடும் எனவும் கோழிப் பண்ணை விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
-இக்பால் அலி.
No comments:
Post a Comment