இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் 50 ஆயிரம் பேர்
இலங்கையில் தற்போது பதிவு செய்யப்பட்ட 50 ஆயிரம் குற்றவாளிகள் வரை (ஐ.ஆர்.சி) இருப்பதாக பொலிஸ் குற்றத்தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 800 பெண்கள் இருப்பதாக அந்த பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க சிரிவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரசித்தமான குற்றவாளிகளின் பட்டியலில் வருடாந்தம் ஆயிரம் பேர் வரை இணைவதாகவும், மரணமடைதல் ,70 வயதை தாண்டல் போன்ற காரணங்களினால் சிலர் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து அகற்றப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல் ஒன்று தொடர்பாக ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டு இரண்டாவது தடவையாகவும் அந்த நபர் குற்றச்செயல் ஒன்று தொடர்பாக சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் குறித்த நபர் ஐ.ஆர்.சி என கருதப்படுவார்.
0 comments :
Post a Comment