அருண் தம்பிமுத்துவின் கேள்விக்கணையால் வாயடைத்துப் போனார் சனல் 4 இயக்குநர்..
'இலங்கை - நல்லிணக்கமும் நீதியும்' என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது. பிபிசியில் 'ஹாட்ரோக்' நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இனால் நாடத்தப்பட்ட இவ்விவாதத்தில் சனல் 4 தொலைக்காட்சின் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தீவிர புலி ஆதரவாளரான ஜான் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச் சபையின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், ஜனாதிபதியின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க, ஜனாதிபதியின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
விவாதத்தின்போது அருண் தம்பிமுத்து எனது தந்தை சாம் தம்பிமுத்துவும் தாயும் கனடா தூதரகத்தின் முன்னால் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பியபோது பதிலளிக்க முடியாது வாயடைத்து நின்றனர் சனல் 4 இயக்குர் கெல்லம்மெக்ரேயும் புலி ஆதரவாளரான ஜான் ஜனநாயகமும்.
எனது பெற்றோரைப் படுகொலை செய்தவர்கள் மட்டக்களப்பில் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் என்ன விளையும் என்பதைச் சொல்லுங்கள் என்று மேலும் அவர்களைக் கேட்டார். இந்த வேளையில் மண்டபத்தில் பலமான கைதட்டல் கேட்டது.
இலங்கையில் இருந்து இலண்டன் வந்து சுகபோக வாழ்க்கை நடத்தும் நீங்கள் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புவது எவ்வாறு? புலிகள் கொலையாளிகள் இல்லையென்று நீங்கள் கூறுவது எவ்வாறு என்று சனல் 4 இயக்குனர் கெல்லம் மெக்ரேகேயிடம்ரென் வினாவெழுப்பிய போது அவர் மௌனமாக இருந்தார்.
0 comments :
Post a Comment