வாழ்க்கைத்துணை கூட தனது செல்போனை பார்க்கக் கூடாது என 49% மானோர் நினைக்கிறார்களாம்.
இங்கிலாந்தின் 'செக்யூர் என்வாய்' அமைப்பு, செல்போன் பயன்படுத்துவோர் குறித்து ஒரு நடத்திய ஆய்வின் முடிவில் 'செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது, செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது, என 66 சதவீதமானோர் கருத்து தெரிவித்துள்ளனர் என 'செக்யூர் என்வாய்' அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கையில் செல்போன் இல்லையோ என்ற பயம், செல்போன் தொலைந்து விடுமோ, யாராவது அதில் உள்ள தகவல்கள், படங்களை பார்த்து விடுவார்களோ என்ற கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளதாகவும், இந்த பயத்துக்கு 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 77 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதுடையோர் 68 சதவீதம் பேரும், ஆளாகியுள்ளனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 75 சதவீதமானோர் குளியலறையில் செல்போன் பயன்படுத்துவதாகவும், 49 சதவீதமானோர் தங்கள் வாழ்க்கைத்துணை கூட தனது செல்போனை பார்க்கக் கூடாது என நினைப்பதாகவும், செல்போன் பத்திரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு தினமும் 34முறை வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment