கடனட்டை மோசடி - கனடாவில் இலங்கையர் உட்பட 45 நபர்கள் கைது!
கனடாவில், மில்லியன் டொலர்கள் கடனட்டை மோசடி சம்பந்தமாக நீண்ட காலமாக புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்த ஆர்.சி.எம்.பி.யினர் நேற்று மொன்றியலில் 45 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். மற்றும் 16 சந்தேக நபர்களை காவல்துறை பிடி விறாந்துடன் தேடி வருகின்றனர்.
2008ம் ஆண்டிலிருந்து தமது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவிலான பணம் சூறையாடப்பட்டு வருவதாக கனடாவிலுள்ள வங்கிகள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தன.
தீவிர விசாரணையின் பின்னர் போலியான வங்கி அட்டைகளின் மூலமே பணம் சூறையாடப்பட்டு வருவதையும், அதுவும் மொன்றியலிலேயே இம்மோசடி இடம்பெற்று வருவதாகவும் கண்டறிந்த காவல்துறை சந்தேகத்துக்குரிய 61 பேரினை கைது செய்வதற்கு பிடிவிறாந்து பெற்றுக் கொண்டனர்.
இவர்களுள் 45 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் அரோபியர்களும், சிறிலங்கா பிரஜைகளும் அடங்கியுள்ளனர் என பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
திருட்டுத் தனமான முறையில் வாடிக்கையாளர்களின் கடனட்டை சம்பந்தமான விபரங்களைப் பெற்றுக் கொண்டு அதே பெயர் விபரங்களுடன் போலியான கடன் அட்டைகளை தயார் செய்து வங்கி மெசின்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment