1970 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி இடம்பெற்ற பொது தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெலியத்த தேர்தல் தொகுதி சார்பில் உறுப்பினராக தெரிவாகி இன்றுடன் 42 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அவர் 23 ஆயிரத்து 103 வாக்குகளை பெற்றார். அவரது எதிர்தரப்பு வேட்பாளரான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் டொக்டர் ரஞ்சித் அத்தபத்து 14 ஆயிரத்து 499 வாக்குகளையே பெற்று, தோல்வியை தழுவியிருந்தார்.
1972 ஆம் ஆண்டு ஜனாதிபதி முதல் முறையாக பாராளுமன்றத்தில் இளம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் வரை, அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு, வெற்றிபெற்றார் என்பது சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment