ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் என்றால் 4 சத வீத வரி அறவீடு
ஐம்பதாயிரம் ரூபாவுக்கு அதிகமாக மாத வருமானத்தை பெறும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இனிவரும் காலங்களில் வருமான வரியை செலுத்தவேண்டும்.
இதற்கான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் பி பி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், 50 ஆயிரம் ரூபாவை வருமானமாக பெறும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் 4 வீதத்தை வருமான வரியாக செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment