குருநாகல் மாவட்டத்தில் 30 பிரதேச செயலகங்ளிலுள்ள 1610 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்போது 397 பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இதில் கூடுதலான வெற்றிடங்கள் காணப்படும் இடமாக ரிதிகம பிரதேச செயலகம் உள்ளது. அங்கு 31 வெற்றிடங்கள் உள்ளன.
பண்டுவஸ்நுவர மேற்கு பகுதியில் 20 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இப்பாகமுவ, மாஹோ மற்றும் பன்னல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 19 விகிதம் 59 வெற்றிடங்கள் நிலவுகின்றன. குருநாகல் பகுதியில் 18 ம் மற்றும் அளவ்வ பகுதியில் 17 ம் வெற்றிடங்கள் உள்ளன.
வெற்றிடங்கள் நிலவும் பிரிவுகளில் சேவையாற்றுவதற்கு அயற்பிரிவுகளில் உள்ள கிராம உத்தியோகஸ்தர்கள் தற்காலிகமாக வேலை பார்ப்பதற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிராம உத்தியோகஸ்தர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும், பொது மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளில் பொது மக்களுக்கு உரிய நேரத்திற்கு வழங்கக் கூடிய விண்ணப்பங்களை, சான்றுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment