கிராம சேவகர் நியமன வயது 35 ஆக அதிகரிப்பு
கிராம சேவையாளர் பதவிக்கு புதியவர்களை நியமிக்கும் போது வயது மட்டங்களை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டே கிராம சேவையாளர்களின் வயது மட்டங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது கிராம சேவையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 30 ஆகும். இதனை, 35 வயதாக அதிகரிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மாதம் கிராம சேவையாளர்களை சேவைக்காக இணைந்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment