பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 34 பேர் பலி
வியட்நாமில் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 34 பேர் பலியாகியுள்ளதுடன் 21பேர் படுகாயமடைந்துள்ளனர் என வியட்நாம் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
வியட்நாமின் மத்திய மாகாணத்தில் உள்ள டக்லக் பகுதியில் இருந்து வர்த்தக நகரமான ஷி மின்ச் நகரத்திற்கு 70க்கும் மேற்பட்டோருடன் பயணம் செய்து கொண்டிருந்த போதே பஸ் கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழ்ந்ததுள்ளது.
இவ்விபத்தில் பஸ் டிரைவர் உட்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் 21பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டக்லக் நகரின் மருத்துவ மனைதுணை இயக்குனர் பிலியூ அருள் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment