ஏமன் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 33 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி
ஏமன் நாட்டின் வடக்குப்பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதில் ஏமன் ராணுவமும், அமெரிக்க போர் விமானங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தலைநகர் சானாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் தற்கொலை தீவிரவாதி புகுந்து குண்டை வெடிக்க செய்ததில் 100 வீரர்கள் பலியானார்கள். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதனை அடுத்து ஏமன் ராணுவத்தினர் தீவிரமாக அல்கொய்தா தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். அபியான் பகுதியில் உள்ள ஜார் என்ற இடத்தில் ராணுவத்தினர் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் எகிப்து, சோமாலியா நாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இதேபோல அமெரிக்க போர் விமானங்களும் குண்டு வீசி தாக்கின. இதில் எத்தனை தீவிரவாதிகள் இறந்தனர் என்பது அறிவிக்கப்படவில்லை.
0 comments :
Post a Comment