இஸ்லாமாபாத் அருகிலுள்ள அபோதா பாத்தில் ஒசாமா பின்லேடன் மறைந் திருப்பதாக அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.க்கு தகவல் வழங்கிய பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் மறைந்திருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்த வீட்டில் இருந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரியை பெறுவதற்காக, அப்பகுதியில் போலியான, தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமொன்றை நடத்திய டாக்டர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனையும் 320,000 பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு உதவியாக இந்த பாகிஸ்தான் மருத்துவர் இருந்தார் என்றும் நாட்டுக்கு எதிராக சதி செய்தார் என்றும் குற்றஞ்சாட்டி அவரை சிறையிலடைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஷகில் அப்ரிதியை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் பாகிஸ்தானிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
No comments:
Post a Comment