Wednesday, May 16, 2012

இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கப்படும்.

2010ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறு பேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகும் என புலமைப் பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலமையில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு உத்தியோக பூர்வமாக புலமைப்பரிசில்களை வழங்குவதன் இந்த நிகழ்வு ஆரம்பித் துவைக்கபடுவதுடன் மாவட்ட மட்டத்தில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தெரிவிக்கிறது.

இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10300 மாணவர்களுக்கு இம்முறை புலமைப் பரிசில்கள் கிடைக்கவுள்ளதாகவும், திறமையின் அடிப்படையிலான புலமைப் பரிசில்கள் பெறுவோருக்கு மாதம் ஒன்றிற்கு 2550ரூபாவும், சாதாரண புலமைப்பரிசில் பெறுவோருக்கு 2500 ரூபாவும் வழங்கப்படும் எனவும் நிதியம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்களில் 50 சதவீதமானோருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுவதாக நம்பிக்கை நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com