எழிலனின் சகாக்கள் 30 கைது .
திருகோணமலையில் மக்களோட மக்களாக நடமாடி வந்த எழிலன் குழுவைச் சேர்ந் த 30 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை, அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்துக் கொண்டு புலிகளுக்காக சம்பூர் மற்றும் நிலாவெளி பகுதிகளில் செயற்பட்டு வந்ததாக அறிய கிடைத்ததாக தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளோர் பாதுகாப்பு படையிடம் சரணடையாமல் இருந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.
திருமலை புலித் தலைவராக இருந்த எழிலன் மட்டும் சரணடைந்து தற்போது பூசா முகாமில் இருக்கின்றார்.
மேலும் இப்புலிகள் திருகோணமலை கடற்படை பாசறை தாக்குதலில் தொடர்புபட்டவர்கள் என்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் எட்டியுள்ளது.
0 comments :
Post a Comment