பழைய பால்மா கையிருப்புகளை புதிய விலைக்கு விற்பனை செய்த 30 வர்த்தகர்கள் கைது
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் உத்தரவையும் மீறி பழைய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட பால்மாவை புதிய விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிககையை, ஆரம்பித்ததுளளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பழைய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட பால்மாவை புதிய விலைக்கு விற்க முடியாதென, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு வர்த்தகர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் இவ்வுத்தரவையும் மீறி, மேசடியான முறையில் பால்மாவை விற்பனை செய்த 30 வர்த்தகர்களை கைது செய்துள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு பிரதேசங்களில், விலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, இவ்வாறான விற்பனை நடவடிக்கைகளில் வர்தகர்கள் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு விற்பனை செய்யும் வர்தகர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறுமெனவும், நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment