Tuesday, May 29, 2012

போலி வாகன விபத்துக் காப்புறுதி! கனடாவில் தமிழனுக்கு 3 ½ ஆண்டு சிறை.

திட்டமிட்ட முறையில் போலியான வாகன விபத்துகளை ஏற்படுத்தி, போலியான காயம்பட்டோரை உருவாக்கி, 1.5 மில்லியன் டொலருக்கு மேல் காப்புறுதி செய்தவர்களுக்கு செலவு வைத்த சமூக விரோத அமைப்பின் சூத்திரதாரித் தலைவர்களில் ஒருவரான 38 வயது உதயகாந்தன் ‘மனோ’ திருநாவுக்கரசுக்கு டொராண்டோ நீதி மன்றம் 3 ½ ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதில் 1,2 மில்லியன் டொலர் திருநாவுக்கரசுவின் வர்த்தகக் கணக்கின் ஊடாகவே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீள் செலுத்தலாக 375,000 டொலர் இறுக்குமாறும் நீமன்றம் அவருக்கு கட்டளையிட்டது.

ட்ரக் ஓட்டுநர்கள், வாகனம் திருத்தும் கடைகள் மற்றும் மறுவாழ்வு நிலையங்கள் போன்றவை திருநாவுக்கரசுவின் இந்த நவீன மோசடி கவர்ந்துள்ளதாக ஒன்டாரியோ உயர்நீதிமன்ற நீதிபதியான ஜோன் மக்மோகன் தீர்ப்பளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்
13 வாகன மோதல் சம்பவங்கள் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்கள் திருருநாவுக்கரசு மீது சுத்தப்பட்டிருந்தது. குற்றத்தை ஏற்றுக் கொண்ட திருநாவுக்கரசு திருமணமானவர், மூன்று பிள்ளைகளின் தந்தை. இலங்கையில் 6 வயது சிறுவனாக இருந்த போது அவர் கண் முன்னாலேயே பெற்றோரும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டதானால் உளப்பாதிப்பு ஏற்றபட்டிருந்ததாகவும் ஆனால் 1990 ல் கனடா வந்த பிறகு வழமைக்குத் திரும்யிருந்ததாவும் அறிய முடிகிறது.

No comments:

Post a Comment