வருகின்றது புதிய சட்டம். 250000 புலம்பெயர் தமிழர் இழக்கின்றனர் பிரஜாவுரிமையை.
குடிவரவு மற்றும் குடியகழ்வுச் சட்டத்துக்கு அரசாங்கம் கொண்டுவரும் திருத்தத்தின் காரணமாக அரசாங்கத்தினால் டயஸ்போரா என்று அழைக்கப்படும் புகலிடத் தமிழர்கள் இரண்’டிலட்சம் பேர் இலங்கையில் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இனிமேல் இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு ‘பராசமுத்ரீய ஸ்ரீலாங்கிக’ ( ‘கடல்கடந்த இலங்கையர்’ என்று கொள்ளலாம்) என்ற பெயரிலான திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்வதாக அறிய முடிகின்றது.
இந்த திட்டத்தின் படி ஐந்து ஆண்டு காலத்தின் பின்னர் இரட்டைக் குடியுரிமை கோருவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட மாட்டாது.
இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணம் ரூபா இரண்டிலட்சம், பிள்ளைகளுக்கு ரூபா 50,000/=.
எவ்வாறாயினும், இலங்கை அரசுக் கெதிராக பொய்த் தகவல் வழங்கியமை, போர்க்காலத்தில் எதிரிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், குற்றத்த தண்டணை பெற்று இரண்டாண்டுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள், , நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் எதிராக செயற்பட்டிருத்தல் போன்ற குற்றங்களைச் செய்திருப்பவர்கள் ‘பராசமுத்ரீய ஸ்ரீலாங்கிக’ திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.
1 comments :
Very Good
Post a Comment