2012ம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார மாநாடு யூலை மாதம்
2012ம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார மாநாடு யூலை மாதம் 10ம் திகதி முதல் 12ம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
உலக பொருளாதாரத்துள் இலங்கையை நிலை நிறுத்துதல் என்ற தலைப்பில் இம் மாநாடு இடம்பெறவுள்ளது.
சர்வதேச ரீதியில் பிரபலம் பெற்ற பொருளியலாளர்கள் இங்கு உரை நிகழ்ந்தவுள்ளனர்.
நாட்டுள் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி அடைந்து வரும் சந்தையுடன் நாடுகளை தொடர்புபடுத்துதல், நாட்டின் நிபுணத்துவத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இம் மாநாடு கவனம் செலுத்தும்.
0 comments :
Post a Comment