மிகவும் சூட்சுமமான முறையில் பிரயாண பை ஒன்றில் மறைத்து வைத்து மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த ஒரு தொகை மாணிக்க கற்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணிக்க கற்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவரென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்ததுள்ளது.
சந்தேக நபருக்கு மாணிக்ககற்களை விமான நிலையத்தின் ஊடாக கடத்துவதற்கு வேறெரு தரப்பினர் உதவியிருக்கலாமென சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment