மே 15-17 இல் முன்னாள் இராணுவத் தளபதி விடுதலை செய்யப்படலாம்.
குற்றவியல் இராணுவ நீதிமன்றின் தீர்ப்பின் பேரில் சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இம்மாதம் கொண்டாடப்படுகின்ற போர்வெற்றி நாட்களான 15-17 ம் திகதிகளில் விடுதலை செய்யப்படலாம் என பாதுகாப்பு தரப்பு தகவல்களை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
இவருக்கான சிறைக்காலம் ஜுலை மாதம் முடிவடைகின்றநிலையில் ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரிரான் அலக்ஸ் ஜனாதிபதியுடன் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
முன்னாள் இராணுவத் தளபதியின் சிறைக்காலம் முடிவடைகின்றபோது அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மேலுமோர் வழக்கு நிலுவையில் உள்ளது.
எது எவ்வாறாயினும் கடந்த சுதந்திர தினத்தன்று அவர் விடுதலை செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியிருந்தும் அது நிறைவேறியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment