14, 15, 16, 17, 18 ஆம் திகதிகளில் காலி முகத்திடலை அண்டிய வீதிகள் மூடப்படும்.
மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றி விழா கொண்டாத்தை முன்னிட்டு பம்பலப்பிட்டி மற்றும் அதனை அண்டிய சில வீதிகள் இன்று முதல் சில நாட்களுக்கு மூடப்படும் என ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ச கருமான அஜித் ரோஹனதெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி ,இடம்பெறும் மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றி விழா கொண்டாத்திற்கான அணி வகுப்பை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் பயிற்சி ஒத்திகைகள் ,இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக 14, 15, 16, 17, மற்றும் 18 ஆம் திகதிகளில் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய காலி வீதி மூடுவதற்கோ அல்லது வாகன போக்குவரத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கோ தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் காலி முகத்திடல் சுற்று வட்டத்திலிருந்து பழைய பாராளுமன்றம் வரையிலான வீதி, குறித்த நாட்களில் காலை 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப்படவிருப்பதனால் ,தற்காக மாற்று பாதைகளை பயன்படுத்தமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டைக்கு வருவோர் கொள்ளுப்பிட்டி சந்தி அல்லது காலி முகத்திடல் சுற்று வட்டத்தின் வலது பக்கம் திரும்பி, புறக்கோட்டை அல்லது கோட்டைக்கு செல்லுமாறும் அதே போன்று கோடடை மற்றும் புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்கு செல்வோர் செரமிக் சந்தியில் இடது புறமாக திரும்பி, மீண்டும் வலது புறமாக சென்று சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் வீதியின் ஊடாக செல்லவதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து செயல்த்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment