ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்களுக்கு 12 இலட்சம் ரூபா நிவாரண கடன் வசதி திட்டம்.
கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான நிவாரண கடன்களை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கடன் திட்டத்தின் முதலாம் கட்டமாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்காக நலன்புரி நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அங்கீகாரம் திறைசேரியினால், ஊடக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க இக்கடன் தொடர்பான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளனதாகவும், வரவு செலவு திட்ட பிரேரணைகளின் பிரகாரம், மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபா சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரண கடனாக வழங்கப்படவுள்ளதாகவும், இரண்டாம் ஆம் கட்டத்தில் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இக்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது
0 comments :
Post a Comment