கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாசெல்ல முயற்சித்த 113 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நீர்கொழும்பு, ஜா-எல, உடப்பு, சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாசெல்ல முயற்சித்ததாகவும், இக்குழுவினரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு உதவிய ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக ஒருவரிடம் இரண்டு இலட்ச ரூபா முற்பணம் பெறப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியா சென்ற பின்னர் 13 இலட்ச ரூபா வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் அவுஸ்திரேலியாவுககு அனுப்பபடவிருந்நதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment