11 வயது மாணவியைக் கடத்த முயன்ற யாழ் இளைஞன்! வகையாக மாட்டினான்!!
யாழ்ப்பாணத்தில் 11 வயது மாணவியொருவரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. கொக்குவில் இந்துவில் கல்வி பயிலும் 11 வயது மாணவி ஒருவர் தனது பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த பின்னர் கல்லூரி வாசலில் தந்தை வரும்வரை காத்து நின்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவ்வழியால் வந்த இளைஞன் ஒருவன் இந்தச் சிறுமியைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளான். அவ்வேளை மாணவியின் தந்தையார் அவ்விடத்திற்கு வரவே இந்த இளைஞன் பாடசாலை வளவுக்குள் தப்பியோடியுள்ளான். இளைஞனைத் துரத்திச் சென்ற சிறுமியின் தந்தையார் அவனைப் பிடித்து கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் இந்த இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதை கோப்பாய் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment