தேசிய நூதனசாலை கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா
தேசிய நூதனசாலையின் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விபரங்களை அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சரியான முறையில் தகவல் தரும் நபருக்கு 10 லட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தெர்ர்பில் பொது மக்களை 011 232 8138 மற்றும் 011 232 0141 ஆகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த கண்டி இராசதானிக்கு சொந்தமான புராதன பொருட்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கொள்ளையிடப்பட்டது.
எனினும் குறித்த கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையிலேயே பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
0 comments :
Post a Comment