யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த பிரபல பாடசாலையொன்றின் 10மாணவர்கள் கைது
கடந்த எட்டாம் திகதி வெசாக் பந்தல்களை பார்வையிடுவதற்காக காலி முகத்திடலுக்கு வந்திருந்த யுவதி யொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும சம்பவத்தில் தொடர்புடைய கம்பஹாவைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் 10 மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தோற்றவுள்ளதால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர்கள் சார்பில் அஜரான சட்டத்தரணி கோரியிருந்தார் எனினும் அக்கோரிக்கையை நிராகரித்த நீதவான் குறித்த மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments :
Post a Comment