ITU வின் முன்னோடிகளுக்கான பூகோள மாநாட்டின் அநுசரணை நாடாக, இலங்கை தெரிவாகியுள்ளது.
சர்வதேச தொலைதொடர்பு சங்கத்தின் முன்னோடிகளுக்கான கோளமய மாநாடு மற்றும் கோளமய கைத்தொழில் முன்னணியாளர்களின் ஒன்றியத்தின் அநுசரணை நாடாக, இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அநுசரணை நாடாக இலங்கை செயற்படுவதற்கு, ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கமைய, 70 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அநுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை, இம்மாநாடு நடைபெறும். சர்வதேச தொலைதொடர்பு சங்கத்தில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்மாநாட்டில், 500 க்கும் மேற்பட்ட தொலைதொடர்பு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment