80 களில் ஆரம்பித்து வன்னிப்படு கொலை வரை, பெரும்பான்மையான இந்திய அரசியல்வாதிகள் தமிழின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று ஈழம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர்வடிக்கும் கருணாநிதியோ, இந்திய பார்பனீய அதிகாரத்தின் தமிழ் நாட்டு அடியாளான தமிழின விரோதி ஜெயலலிதாவோ நடத்துகின்ற சூதாட்டத்தில் நசுங்கி மாண்டுபோகின்றவர்களுள் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகளும் அடங்கும்.
ஒரு சமூகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கப் போவதாக வரிந்து கட்டிக்கொண்டு உணர்ச்சி அரசியல் நடத்தும் ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் தனது கொல்லைப் புறத்தில் அகதிகள் மிருகங்கள்போல நடத்தப்படுவது தெரியாதா என்ன? இவர்களுக்கும் மேல் புலம் பெயர் நாடுகளில் மில்லியன்களை சுருட்டிக்கொண்ட ‘தேசிய வியாபாரிகள்’ இந்த அடிமைகள் குறித்துப் பேசுவதே கிடையாது. செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்ற மாட்டுத்தொழுவம் ஒரு சிறைகூடம். அங்கும் ஈழ அகதிகள் சிறை வக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டுகொள்வதற்கு யாரும் முன்வந்ததில்லை. செங்கல்பட்டு முகாமில் சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற உணர்ச்சி அரசியல் வியாபரிகளது காலடிகூடப்பட்டதில்லை. தமிழின விரோதி ஜயலலிதாவினதும், காப்ரேட் கருணாநிதியினதும் கோரப்பிடிக்குள் ஆண்டாண்டுகளாகச் சிக்கித் தவிக்கும் இந்த அடிமைகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
No comments:
Post a Comment