Monday, April 9, 2012

புத்தாண்டு காலத்தில் கோழி, முட்டை வகைகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது –அரசாங்கம்.

புத்தாண்டு காலத்தில் கோழி மற்றும் முட்டை வகைகளை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோழிப்பண்ணையாளர்கள் பண்டிகை காலத்தில் விலைகளை அதிகரிப்பதில்லை என இணக்கம் தெரிவித்தமையினால் வெளி நாடுகளிலிருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டை பேண வேண்டிய தேவை ஏற்படவில்லையென கால் நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி மற்றும் பண்ணை பொருட்களை குறைந்த விலையில் நுகர்வோர் பெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்கு குறைந்த விலையில் மீன்கள் விற்பனை செய்யவதற்காக நிவாரண விலையில் மீன்களை விற்பனை செய்யதற்கு கடற்றொழில் கூட்டுதாபனம தீர்மானித்துள்ளது.

பிரதான நகரங்களிலுள்ள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் சேவைகள் மூலம் இவ்வாறு மீன்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அத்துடன் இலங்கையில் தயாரிக்கப்படும் டின் மீன்களும் இவ்விற்பனை நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களுக்கு 50 ஆயிரம் டின் மீன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment