கொரியாவில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்த நபருக்கு பிணை
கொரியாவில் மாதம் 60 ஆயிரம் ரூபா வேதனத்திற்கு சாரதி வேலை பெற்று தருவதாக கூறி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான பெண்ணை , நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் வேபட பிரதேசத்தை சேர்ந்தவராவார். முறைப்பாட்டாளரின் கணவருக்கு கொரியாவில் சாரதி வேலை பெற்று தருவதாக கூறி சந்தேக நபர் பணத்தை மோசடி செய்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment