சித்திரைப் புத்தாண்டு காலத்தில் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு டையவர்கள் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன இவ்வாறான குற்றவாளிகளின் விஷம நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாமென பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் கொழும்பிலுள்ள பிரதான நகரங்களில் முடிச்சு மாறிகளிடம் இருந்து தங்களின் பணப் பைகளையும் பொருட்களையும் பாதுகாத்துக்கொள்ளுமாறும் ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்ற பட்சத்தில் உடனடியாக அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment