Tuesday, April 10, 2012

உலகளாவிய ரீதியில் இராஜதந்திர உறவுகளை பேண இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்காக துருக்கி தலைநகர் அங்காராவில் புதிய இலங்கை தூதரக அலுவலகத்தை இவ்வாண்டு இறுதிக்கு முன்னர் ஸ்தாபிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் தற்போது மூடப்பட்டுள்ள ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் இலங்கை தூதரகங்களை துரித கதியில் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். சர்வதேச உறவுகளை விரிவுப்படுத்தி இலங்கையுடனான நெருங்கிய உறவுகளை பலப்படுத்தி கொள்வதே இவ்வேலைத்திடடத்தின் நோக்கமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நைஜிரியா, மொரிட்டானியா, முர்ஸி ஆகிய நாடுகளுடனும் சிறந்த தூதரக உறவுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment