நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றிவைக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தடயப் பொருட்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படதற்கிணங்க காலி நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தடயப் பொருட்களுக்கு பொறுப்பான கண்காணிப்பு உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இச் சம்பவம் குறித்து நீதிமன்ற பதிவாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment