Monday, April 2, 2012

கஹவத்தை இரட்டைக்கொலையின் சநதேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கஹவத்தை இரட்டைக் கொலையின் சநதேக நபர்களான கொடகவெல பிரதேச சபை உறுப்பினரும்,அவரது சகோதரரும், சகோதரரின் மனைவியும், முச்சக்கர வண்டி சாரதியொருவரும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை,தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல நீதவான் ஷாந்தனி நெரஞ்சலா டயஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள், இன்று முற்பகல் பெல்மடுல்லை, மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதோ நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

படுகொலை சம்பவம் தொடர்பாக, தொலைபேசி இலக்கங்கள், வங்கிக்கணக்குகள், மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதை அவதானிப்பதற்காக, இன்றைய தினமும், பிரதேச வாசிகள், நீதிமன்ற வளவில் கூடியிருந்ததை, அவதானிக்க முடிந்தது.



No comments:

Post a Comment