குமார் குணரத்னம் மற்றும் திமுது ஆர்டிகல தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை
கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜே வி பியின் கிளர்ச்சிக் குழுத் தலைவர்களான குமார் குணரத்னம் மற்றும் திமுது ஆர்டிகல தொடர்பில் இதுவரையில் தகவல் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை கண்டு பிடிக்கும் நோக்கில் ஐந்து பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment