Thursday, April 26, 2012

கொள்ளைலாபம் அடிக்கும் வர்த்தர்களுக்கு தொடர்ந்தும் வலைவீச்சு.

நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு எதிரான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இவ்வாறான வர்த்தகர்களை கைது செய்வதற்காக, பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 4 மாத காலங்களில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த புத்தாண்டு காலத்திலும் நுகர்வோர் சட்டங்கள் அதிக அளவில் மீறப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராகவும், நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கையின் மூலம், கடந்த காலங்களில் 4 கோடி ரூபா, அபராதமாக வசூலிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமைக்காகவே, பெரும்பாலான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment