புத்தாண்டை முன்னிட்டு தனியார் போக்குவரத்துப் பிரிவினர் விசேட போக்குவரத்துச் சேவை
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 5-4-2012 முதல் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தனியார் போக்குவரத்துப் பிரிவினர் விசேட போக்குவரத்துச் சேவையினை ஆரம்பித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையாளர் சபையின் தவிசாளர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வெளி மாகாணங்களுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு பொதுமக்களின் நன்மை கருதி இந்தச் சேவை ஈடுபடுத்தபட்டுள்ளது. இந்தப் போக்குவரத்துச் சேவை எதிர் வரும் 13 ம் திகதி வரை புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்த பஸ் தரித்து நிலையத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.
சாதாரண சேவை மற்றும் விசேட சேவை என்ற வகையில் தினசரி 2500 பஸ்கள் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காலி, மாத்தறை, தங்கல்ல, பதுளை, மொனராகலை,எம்பிலிப்பிடிய, அட்டன், நுவரெலியா,கண்டி மஹியங்கனை , அநுராதபுரம், பொலன்நறுவை,புத்தளம்,வவுனியா மற்றும் பல பிரதேசங்களுக்கு இந்தப் புதுவருட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்த புதுவருட பஸ் போக்குவரத்துச் சேவையில் போக்குவரத்துக் கட்டணம் குறித்த விசேட ஸ்டிகர் விநியோக்கிப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment