Thursday, April 12, 2012

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் திட்டம் - எஸ்.பி. திசாநாயக்க

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வுள்ளதாகவும் இதுதொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுகஸ் தோட்டைபுனித அந்தோனியார் கல்லூரியில் இடம்பெற்ற 265 வது மகாபொல கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், மகாபொல புலமைப் பரிசில் கிடைக்காத மாணவர்களுக்கும், மகாபொல புலமைப் பரிசில் நிதி தமது கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதாது என கருதும் மாணவர்களுக்கும், அவர்களது உயர்கல்வியை முன்னெடுப்பதற்கு இலகவாக்க இவ்வகையான கடன் உதவிகளை வழங்குவது தொடர்பாகவும், மகாபொல புலமைப் பரிசில் நிதியை அதிகரிப்பது தொடர்பாகவும், ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் வருடாந்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெறுகின்றனர் இவர்களில் 22 ஆயிரம் பேரை நாங்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்கின்றோம். அவர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர், இதனால் ஏராளமான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியேறுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment