தென்கொரிய ஜனாதிபதி லீ மயூம் பக்கினின் அழைப்பினை ஏற்று 4 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினர் சியோலிலுள்ள விசேட விமான நடவடிக்கை தலைமையகத்தை சென்றடைந்ததுள்ளதுடன் அவர்கட்கு அங்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை தென்கொரிய பிரதி வெளிவிவகார அமைச்சர் கிம் சுங் ஹங் மற்றும் தென்கொரியாவிற்கான இலங்கை தூதுவர் திஸ்ஸ விஜேரத்ன உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் தென்கொரிய இராணுவத்தினால் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்கொரிய ஜனாதிபதியுடன்பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் நன்மைபயக்கும் ஒப்பந்தங்கள் பலவற்றிலம் கைச்சாத்திடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் சியோல் நகர முன்னணி வரத்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி பூசான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் அனுசரணையில் இடம்பெறும் இலங்கை கொரிய வர்த்தக சங்கத்திலும் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ்குணவர்தன, நிஷாந்த முத்துஹெட்டிகம, ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் வர்த்தக பிரமுகர்களும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment