சமய ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி – அரசாங்கம் குற்றச்சாட்டு
சமய பேதங்கள் மூலமாக நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் பல்வேறு செயற்பாடுகள் இதனை வெளிப்படுத்துவதாக விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொடகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளை வீதியில் இறக்கி போராட்டங்களில் ஈடுபடத் தூண்டும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள எந்வொரு வசதிகளையும் நிறுத்தப்போவதில்லை எனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment