Tuesday, April 24, 2012

பொது சுகாதார பரிசோதகர்கள், பல்கலை.விரிவுரையாளர்கள் -பணிப் பகிஷ்கரிப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் 25ம் திகதி தொடக்கம்.

பல்கலை.விரிவுரையாளர்கள் தொழிற்சங்கம் அடுத்த மாதம் 26ம் திகதி அன்று


தமது கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்காததால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 26ம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று 24ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் குறித்து மூன்று தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளபோதும் இதுவரை தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் நாளை 25ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடை கொடுப்பனவு 15000 வழங்குதல், எரிபொருள் கொடுப்பனவு 7500 ரூபா வழங்குதல் மற்றும் அலுவலக கொடுப்பனவாக நகர அடிப்படையில் 2500 ரூபாவும் கிராம அடிப்படையில் 2000 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்பதே இலங்கை பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மூன்று கோரிக்கைகளாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com