திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கையில் வெள்ளரிப்பழச் செய்கை இம்முறை அமோக விளைச்சலை கொடுத்துள்ளது.
இம் மாகாணத்தில் குறிப்பாக பயிரிடப்படும் வெள்ளரிப்பழச் செய்கை இம்முறை அமோக விளைச்சலை தந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழச் செய்கை என்றுமில்லாதவாறு, அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, கிராண்குளம் உட்பட பல இடங்களில், வெள்ளரிப்பழச் செய்கை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
50 ரூபா முதல் 200 ரூபா வரை சந்தையில் இவை விற்பனையாகின்றன. தற்போதைய சூழலில், பல்வேறு இடங்களுக்கும் சென்று, வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்ய முடிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபா வரை இலாபத்தை பெறமுடியுமென்றும் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment