1985 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய கல்வி நிறுவகம் சட்ட ரீதியான முறையில் பட்டங்களையும் பட்ட பின் படிப்பு பட்டங்களையும் வழங்க்கூடிய அதிகாரம் கொண்ட நூறு வீத அரசாங்க உரிமையுடைய அரசாங்க கல்வி நிறுவனமாகும். எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டங்களை வழங்க கூடிய கல்வி நிறுவனமாக தேசிய கல்வி நிறுவனம் அமையும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக ஞபகார்த்த சர்வதேச் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
கல்வி அமைச்ச்ரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு கல்வி முதுமாணிப்பட்டம் ,கல்வி முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணிப்பட்டம் , கல்வி முகாமைத்துவ கல்வி மாணிப்பட்டம். கல்வி மாணிப்பட்டம் என்பன வழங்கப்பட்டன.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
ஐந்து வருடங்களின் பின்னரே தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின்படி கல்வி அமைச்சர் என்ற ரீதியில் எனக்குள் அதிகாரத்தின் கீழ் பேராசிரியர் அபேரத்ன பண்டாரவின் தலைமையில் பேராசிரியர்கள் ,பீடாதிபதிகள் ,முன்னாள் பீடாதிபதிகள் , பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரை கொண்ட குழுவொன்றை அமைத்தேன்அதன் பரதிபலன்களில் ஒன்றாகவே இன்று (நேற்று) இந்த பட்டமளிப்பு விழா கடந்த வருடங்களின் பின்னர் நடைபெறுகிறது .இனிமேல் ஒவ்வொரு வருடமும் பட்டமளிப்பு விழா நடைபெறும் .
மீப்பேயில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் தலைமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையமாக அமைப்பதற்கு எமது வலயத்தில் உள்ள நாடுகளிடம் உதவிகள் கேட்கப்பட்டன. இதற்காக 47 நாடுகள் எமக்கு வாக்களித்து ஆதரவு வழங்கியுள்ளன.
எமது எதிர்காலம் இருண்டதாக இல்லை. தேசிய கல்வி நிறுவகம் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிறுவகமாக அவைதற்கு ஆசிய அபிவிருத்தி எமக்கு உதவவுள்ளது. இன்று எமது நாட்டில் உள்ள 20 இலட்சம் பேர் வரை கடல் கடந்து வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிகின்றனர். எமது கல்வித்திட்டம் நாட்டின் தேசிய நோக்கத்தையும் தேசிய தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சம்பத் அமரதுங்க பட்டமளிப்பு உரையினை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment