நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் 5175ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர் கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களான தாயும் மகளும் குறித்த சதோச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வது போன்று நடித்து, அங்கிருந்த 5175 ரூபா பெறுமதியான பால்மா , சீஸ் , பிஸ்கட், பாடசாலை உபகரணங்கள் ஆகிய பொருட்களை திருடி தமது உள்ளாடைகளுக்குள் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மறைத்துக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது பாதுகாப்பு ஊழியர்களால் அவர்கள் கையும்;மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளனர் .
பின்னர் அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான தாயையும் மகளையும் பொலிஸார் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்த போது, இருவரையும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் மூவாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார் .
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் ,அவர் குடும்பத்தை கவனிப்பதில்லை எனவும் , மகள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment